வெற்றிமாறன் பட வாய்ப்பை நிராகரித்த நடிகை சமந்தா ! அதுவும் இந்த பிளாக் பஸ்டர் படம்..

தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன், இவர் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார், மேலும் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், அமீர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானதே நடிகை சமந்தா தானாம். அப்படத்தில் கெட்டவார்த்தைகள் பேசவேண்டி இருப்பதால் வடசென்னை படத்தை சமந்தா நிராகரித்ததாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!