அனைவரையும் ஆச்சரியத்தில் திளைக்க வைத்த நடிகர்..!! என்ன செய்தார் தெரியுமா..?


ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரவாயில் காவல் துறை ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்தாரை, அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் மூவிருந்தாளி அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்திற்கு சென்று நேரில் சந்தித்து நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார்.

நடிகர் கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடுமட்டுமல்லாமல், பொது மக்கள் மற்றும் காவல் துறையினரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கடந்த 2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், பெரியபாளையத்திலுள்ள அவரது வீட்டில் கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதோடு வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.


இந்த வழக்கில் வெறும் காலணி, கைரேகை மற்றும் ஒரு தோட்டா மட்டுமே காவல்துறையினருக்கு ஆதாரமாக கிடைத்தது. இதனையடுத்து அப்போதைய வடக்கு மண்டல ஐஜியாக இருந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பல்வேறு விஷயம் பின் வடமாநிலத்தவர்தான் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டுமென உறுதி செய்து கொண்ட ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை, இதில் ஈடுபட்டவர்கள் பவாரியா கொள்ளையர்கள் தான் என்று கண்டுபிடித்தது.

அதனையடுத்து அந்த தனிப்படை பல்வேறு சிரமங்களுக்கிடையே ராஜஸ்தான் மாநிலத்தற்கு சென்று கொள்ளையர்களை கைது செய்தது. இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதுதான் நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம்.


இது போலவே சென்னை கொளத்தூர் நகைக்கடையில் மேல் துளையிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தேடி மதுரவாயில் காவல் துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் தலைமையிலான தனிப்படை ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றது.

அங்கு அவர்களை பிடிக்க முயன்ற போது அவர்களுக்கு இடையேயான சண்டையில் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பெரிய பாண்டியனின் இத்தகைய வீர தீரச் செயல் தமிழக மக்களை நெகிழச் செய்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் கொல்லப்பட்ட பெரிய பாண்டியின் உடல் நேற்று மாலை வரை சென்னை விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


அதனையடுத்து நேற்று நள்ளிரவில் பெரிய பாண்டியனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலை அடுத்த வன்னிக்கோனேந்தல் மூவிருந்தாளி அருகேயுள்ள சாலைப்புதூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்தினருக்கு தீரன் பட கதாநாயகன் நடிகர் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம் சாலைப்புதூர் கிராமத்திற்கு சென்ற நடிகர் கார்த்தி கொல்லப்பட்ட பெரிய பாண்டியனின் மனைவி பானு ரேகா, மகன்கள் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் பெரிய பாண்டியனின் கல்லறைக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!