அஜித்துடன் இணையப் போகும் அந்த நடிகர் யார்..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!


சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் “விஸ்வாசம்” படத்தின் தலைப்பு வந்தது தான் குறை. வழக்கமாக முன்னணி நடிகர்களின் படங்களின் அறிவிப்பு வந்தது கிளம்பும் செய்திகள் போலவே இந்த படத்திற்கும் கிளம்பிவிட்டது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே விஸ்வாசம் படத்தில் அவர் நடிக்கிறார், இவர் நடிக்கிறார் என்ற செய்திகள் பறக்க தொடங்கிவிட்டன

இந்நிலையில், நடிகர் நிவின் பாலி அல்லது பிக்பாஸ் புகழ் ஆரவ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து இரண்டு நடிகர்களும் தங்களின் பதிலை கொடுத்துள்ளனர்.


நான் அஜித் சாரின் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று சில மீடியாக்கள் மூலம் தான் தெரிந்துகொண்டேன். ஆனால், யாரும் விஸ்வாசம் படத்தில் நடிக்குமாறு என்னை அணுகவில்லை. ஒருவேளை அஜித் சாரோடு இணைந்து நடிக்க அழைப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் நடிகர் நிவின் பாலி.

பிக்பாஸ் ஆரவ் இது குறித்து கூறுகையில், விஸ்வாசம் படத்தில் நான் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்கள் போலியானவை. அஜித் சாரின் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் அடுத்த நொடியே ஒப்புகொள்வேன் என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!