அனிருத் பிறந்தநாளுக்காக மாஸ்டர் படக்குழுவினர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழில் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவருடைய இசையில் தற்போது விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. தியேட்டர்கள் திறந்தவுடன் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இசையமைப்பாளர் அனிருத், தனது பிறந்தநாளை அக்டோபர் 16ம் தேதி கொண்டாட இருக்கிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அனிருத் பிறந்தநாளான மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!