மாஸ்டரின் மாஸான சாதனை! மறுபடியும் ஒரு ஆட்டத்த போடுவோமா – முக்கிய பதிவு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள மாஸ்டர் படம் அவரும் 2021 ஜனவரி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா சூழ்நிலையால் தீபாவளிக்கு வெளியாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய், மாளவிகா மோகன், ஸ்ரீநாத், ஸ்ரீமன், கௌரி கிஷன், சாந்தனு, சஞ்சீவ் என பலர் நடித்து இருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பில் பாடல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரை கொண்டாடவைத்தது.

அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் பலரின் மனங்களை ஈர்த்ததுடன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் ஆடவைத்து சமூக வலைதளங்களில் மாஸ் அப் வீடியோ வெளியிட வைத்தது.

தற்போது அப்பாடல் 80 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!