மாஸ்டர் பட ரிலீஸ் குறித்து முதன்முறையாக பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்- திரையரங்கா, OTTயிலா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மற்றும் கைதி படத்தை இயக்கியவர். அதில் அவருடைய வேலைகளை பார்த்து வியந்துபோன விஜய் தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்துள்ளார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்தி லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இருந்துள்ளது.

படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்துள்ளதால் பட ரிலீஸ் OTTயில் என வதந்திகள் வந்தது. ஆனால் அப்போதே படக்குழு திரையரங்கில் தான் வெளியாகும் என கூறிவிட்டனர்.

இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக மாஸ்டர் திரையரங்கில் தான் வெளியாகும் என பேட்டி கொடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!