தல அஜித் அடுத்தடுத்த நடிக்கவுள்ள படங்கள் – முன்னணி இயக்குனர்களுடன் மாஸ் கூட்டணி

நேர்கொண்ட பார்வையின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார் தல அஜித். அதே போல் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பு சுமார் 60% சதவீதம் முடிந்து விட்டது என தெரியவந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆனால் இதில் அஜித் கலந்துகொள்ள போவதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் வலிமை படத்தில் தன்னுடைய காட்சிகளை ஜனவரி மாதத்திற்குள் நடித்து முடித்திவிடுவாராம் அஜித். அதன்பின் Post Production வேலைகள் முடிந்து படம் 2021 கோடை விடுமுறை அல்லது, 2021 தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வலிமை படத்திற்கு பிறகு தல அஜித் எந்தெந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடிக்கவுள்ளார் என்பதை பற்றி பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது :

1. சுதா கொங்கரா இயக்கத்தில் = தல 61

2. மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் = தல 62

3. விஷ்ணு வரத்தான் இயக்கத்தில் = தல 63

4. சிறுத்தை சிவா இயக்கத்தில் = தல 64

இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் செய்தி, என்பது குறிப்பிடத்தக்கது.