இயக்குனர் ஆவதற்கு முன் வெற்றிமாறன் எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா?

படம் இயக்க வேண்டும், அது தரமாக இருக்கனும் என்று உழைக்கும் இயக்குனர்கள் சிலர்.

வெவ்வேறு கதைக்களத்தில் சுவாரஸ்யமான படங்கள் இயக்கி விருதுகளையும் குவிக்கும் வண்ணம் படங்கள் இயக்கி வருபவர் வெற்றிமாறன்.

ஒரு படம் எடுக்க சில வருடங்கள் எடுத்துக் கொள்வார், அவர் எடுத்த நேரத்திற்கு சரியான தரமான படமாக இருக்கும். இன்று இவருக்கு பிறந்தநாள், அவரின் படைப்பு ரசித்த மக்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நாமும் வாழ்த்து கூறிவதோடு அவரை பற்றிய சுவாரஸ்ய தகவலை அறிவோமா?. அவர் 2007ம் ஆண்டு பொல்லாதவன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன்பின் அவர் இயக்கிய ஆடுகளம், உதயம், வட சென்னை, அசுரன் என அனைத்து படங்களும் செம ஹிட்.

தற்போது இயக்குனராக நமக்கு தெரிந்த வெற்றிமாறன் ஒரு படத்தில் நடித்தும் இருக்கிறார்.

இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கதிர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் வைரஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!