மாஸ்டர் படத்தை முழுவதும் பார்த்து விஜய் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா எல்லா பிளானையும் மாற்றிவிட்டது.

இப்போது நேரம் இருந்ததால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் சில திருத்தங்களை செய்திருக்கிறார்.

அண்மையில் படத்தை படக்குழுவினருக்கு திரையிடப்பட்டிருக்கிறது.

அப்போது காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்த விஜய், இயக்குனரிடம் உண்மையில் இது நான் தானா என வியப்போடு கேட்டுள்ளார். விஜய் சேதுபதி தோன்றும் காட்சிகளும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தாராம்.

இப்படத்தில் லோகேஷின் வேலை பிடித்து போக விஜய் தனக்காக இன்னொரு கதையை எழுத கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!