விஜய்யுடன் நடிக்க தயாரா?- கேள்விக்கு தெலுங்கு நடிகர் கொடுத்த அதிரடி பதில்

தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தன்னுடைய 64வது படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

தமிழை தாண்டி தெலுங்கு சினிமா நடிகர்களும் விஜய்யை பற்றி புகழ்ந்து பல பேட்டிகளில் பேசியுள்ளனர். மகேஷ் பாபு நடித்த ஸ்டைபர் பட புரொமோஷனின் போது ஏ.ஆர். முருகதாஸ் இவருடன் இணைந்து நடிக்க விஜய் தயார் என்று கூறியிருந்தார்.

அண்மையில் ஒரு பேட்டியில் மகேஷ் பாபுவிடம், நீங்கள் விஜய்யுடன் இணைந்து நடிக்க தயாரா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், ஏன் நடிக்க மாட்டேன். இயக்குனர், நல்ல கதை வந்தால் நடிக்க வேண்டியது தான் என பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!