விவேகம் சண்டை காட்சி போல வலிமை திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ள சண்டை காட்சி, வெளியான சூப்பர் தகவல்..

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகராக திகழ்பவர், இவருக்கென்று தமிழில் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்தின் 50 சதவீத படபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விரைவில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்படத்தில் வில்லன் கார்த்திகேயா உடன், சட்டை இல்லாமல் சிக்ஸ் பேக் உடலை வெளிப்படுத்தி ஒரு சண்டை காட்சி உள்ளதாம்.

மேலும் இதேபோல் விவேகம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் தல அஜித் தனது சிக்ஸ் பேக்-ஐ காண்பித்து இருப்பார்.

இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பேரும் வரவேற்பை பெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!