வலிமை படத்தில் இப்படி ஒரு காட்சி உள்ளதா? தீரன் அளவிற்கு செம்ம காட்சி…

வினோத் தமிழ் சினிமாவில் சதுரங்கவேட்டை மூலம் கவனம் ஈர்த்தவர். இவர் அதை தொடர்ந்து கார்த்தி நடித்த தீரன் படம் வெளிவந்தது.

இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார்.

இப்படம் ரீமேக் என்றாலும் வினோத் எடுத்தவிதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தற்போது வினோத் அஜித்துடன் மீண்டும் இணைந்து வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஒரு வங்கியை கொள்ளையடிப்பது போல் ஒரு காட்சி வருகிறதாம்.

அவர்களை அஜித் துரத்துவது போல் காட்சிகள் எடுத்தார்களாம்.

இந்த காட்சி தீரன் பஸ் சண்டை அளவிற்கு செம்ம மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!