திடீரென அரசியல் குறித்து டுவிட் போட்ட லாரன்ஸ்

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் அரசியல் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆசிரமம் நடத்தி வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் பலருக்கு உதவினார். இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அரசியல்’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் அரசியலுக்கு வந்து பதவி பெற்று, ஏழை மக்களுக்கு அது செய்வேன், இது செய்வேன் என்று சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி சமூகத்துக்குச் சேவை செய்வதே நல்லது. என்னால் 200 குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வராமலும் இதனை செய்யலாம். சேவையே கடவுள்”. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!