வலிமை வினோத்திற்கு ஏற்பட்ட தலைவலி, என்ன செய்யப்போகிறார்?

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்த படம் கொரொனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது, கொரொனா பிரச்சனைகள் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித் வலிமை படபிடிப்பு இனி கொரொனா பிரச்சனைகள் முற்றிலும் முடிந்த பிறகு எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

ஆனால், கொரொனா பிரச்சனைகள் தற்போதைக்கு முடியாது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படத்தின் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி வெளிநாட்டில் தான் எடுக்க வேண்டுமாம்.

ஆனால், கொரொமாவிற்காக வினோத் சரி இந்தியாவில் அந்த காட்சியை எடுக்கலாம் என்று முடிவு செய்து லொக்கேஷன் தேடினாராம், இந்தியாவில் அப்படி ஒரு இடமே இல்லை என்பது தான் அவருக்கு பதிலாக வந்ததாம். இதனால், அந்த காட்சியை எப்படி எடுப்பது என்று வினோத் குழப்பத்தில் உள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!