பிக்பாஸ் வனிதாவுக்கு இப்படியும் ரசிகர்களா? அவர்கள் செய்துள்ளதை பாருங்கள்! வைரல் வீடியோ

இந்த மூன்றாவது சீசன் பிக்பாஸ் வனிதா விஜயகுமாரால் தினமும் சண்டை,கண்ணீர் என தினமும் போய் கொண்டிருக்கிறது.

வனிதா செய்யும் சில விஷயங்கள் பார்த்து அவரை பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக திட்டி வருகின்றனர் என்பது தெரிந்ததுதான்.

இந்த நிலையில் சென்னையில் வனிதாவின் சில ரசிகர்கள் அவருக்கு கட்டவுட் வைத்துள்ளனர். “அக்கா வனிதாவின் போர்வாள்கள்” என குறிப்பிட்டு அவர்களின் புகைப்படங்களையும் போட்டு உள்ளனர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய கதாநாயகர்களுக்கு மட்டுமே கட்டவுட் வைப்பதுதான் வழக்கம். ஆனால், ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று இருக்கும் ஒரு போட்டியாளர்களுக்கு இது போன்று கட்டவுட் வைப்பது இதுதான் முதல் முறை.

அந்த அளவிற்கு பெரிய அளவில் மக்கள் இடம் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று உள்ளது.

https://www.facebook.com/losliyaarmyda/videos/480214825862475/?t=0

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.