பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட திரையரங்கு, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ்.. !

கொரோனா வைரஸ் தோற்று உலகம் முழுவதும் மிக பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலேசியா நாட்டில் உள்ள (TSR cinemax) என்ற ஒரு திரையரங்கு மட்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான மெர்சல், சர்கார், விஸ்வாசம் மற்றும் தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!