நோகடித்த கேள்வி! உருக்கத்துடன் பதிவிட்ட பிக்பாஸ் காஜல் – ரசிகையின் செயலால் நேர்ந்த வருத்தம்

க்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ல் கலந்துகொண்ட போட்டியாளர் காஜல் பசுபதி. கோ, மௌனகுரு ஆகிய படங்களிலும் அவர் நடித்திருந்தார்.அவருக்கும் பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டருக்கும் திருமணமாகி பின் கடந்த 2012 ல் விவாகரத்தானது. ஆனால் அவர் சாண்டியை இப்போதும் நண்பராக தான் காஜல் பார்க்கிறார் என்பது அவரின் பேச்சே சொல்லும்.

இந்நிலையில் ரசிகை ஒருவர் காஜலின் திருமண வாழ்க்கை குறித்து சாண்டியின் மனம் புண்படும் படி கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கடவுளே, அவர்களை தனியாக விடுங்கள், எத்தனை தடவை தான் சொல்வது, அந்த விசயத்தில் என் மீது தான் தவறு இருக்கிறது. 2012 ல் நாங்கள் பிரிந்துவிட்டோம். எங்கள் பிரிவில் சாண்டியின் மனைவிக்கு எந்த சம்பந்தமுமில்லை. அவர் இப்போது என் கணவரும் இல்லை” என பளீச் பதில் கொடுத்துள்ளார். ஏன் இப்படி அடுத்தவர்களின் பர்சனம் விசயங்களில் தலையீடு செய்கிறார்கள் என தெரியவில்லை என காஜல் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!