தமிழ் சினிமாவில் இதுவரை ரிலீசாகாத திரைப்படங்கள் – வைரல் தகவல்..!!


தமிழ் சினிமா ஏன் உலகத்தில் பல சினிமாக்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக பாதியில் நின்று விடும் அது பணம் சம்பந்தமாக கூட இருக்கலாம்.அது போல் தமிழ் சினிமாவில் பல படங்கள் உண்டு அதில் புரட்சி தலைவர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் எம் ஜி ஆர் படமும் அடக்கம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.விளக்கங்களைத் தாண்டி விவரங்களுக்கு செல்வோம் வாங்க!

1.அண்ணா நீ என் தெய்வம்

புரட்சி தலைவர் எம் ஜி ஆர்,லதா,எம்.என்.நம்பியார் போன்றோர் நடித்து ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவராத திரைப்படம் தான் அண்ணா நீ என் தெய்வம்.இப்படம் 1977 ல் எடுக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ரிலீசாகாத திரைப்படங்கள் ஓர் பார்வை


2.கண்டேன் சீதையை

1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன்,நாசர்,நாகேஷ் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இசையமைப்பாளர் தேவா இசை அமைத்த படம் தான் கண்டேன் சீதையை.பாலச்சந்தர மேனன் இயக்கியப்படம் இன்று வரை திரைக்கு வரவில்லை.

3.சின்ன மணிக்குயிலே

மலையாள இயக்குனர் ப்ரியதர்சன் அவர்களின் முதல் தமிழ் படம் இது தான் இப்படத்தில் நவரச நாயகன் கார்த்திக்,மற்றும் ரேகா நடித்திருப்பார்.1987 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் வெளியிட்ட போதிலும் படம் வெளியிடப்படவில்லை.


4.என்ஜினீயர்

அரவிந்த் சாமி நடிப்பில் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி போன்ற மூன்று மொழிகளில் வெளியாக காத்திருந்த படம் தான் என்ஜினீயர்.சுஜாதா எழுத்தில் காந்தி கிருஷ்ணா இயக்கம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசை என்று பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்த படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

5.நான் அவள் அது

2007 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த டார்லிங் படத்தின் ரீமேக் தான் இப்படம் இதன் நாயகன் மாதவன். பேய் திரைப்படமான இது 2008 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்டு ரீலீஸ் ஆகும் முன்பு ஏற்பட்ட சம்பள பிரச்சனையால் படம் வெளிவரவில்லை.இப்படத்தில் ஜி வி பிரகாஷ் குமார் உட்பட 4 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!