2017 வலைத்தளங்களில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள்..!! முதலிடம் யாருக்கு தெரியுமா..?


பிரபலமான தேடுபொறியான யாஹூ இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் தென்னிந்தியாவில் இருந்து ஒரே ஒரு நடிகை மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல, நடிகை பாவனா கடத்தில் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமா காவ்யா மாதவன் தான்.


டாப் 10 பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளார் நடிகை காவ்யா மாதவன். மேலும், ஆபாச பட நடிகையும், பாலிவுட் நடிகையுமான சன்னிலியோன் சென்ற வருடம் தான் பிடித்த அதே இடமான முதலிடத்தில் உள்ளார்.

ரஜினிகாந்துடன் கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். எஞ்சியுள்ள இடங்களையும் பாலிவுட் நடிகைகளே ஆக்கிரமித்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!