காக்கா முட்டை, கனா நடிகையின் வீட்டில் தொடர் மரணங்கள்! அடுத்தடுத்து நேர்ந்த சோக சம்பவம் – வாழ்க்கையில் அவமானம்

காக்கா முட்டை படம் மூலம் பலரின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கனா படம் அவரின் வாழ்க்கையை திருப்பிப்போட்டது. தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

தன் வாழ்க்கை பயணம் குறித்து திருச்சி டெட் எக்ஸ் நிகழ்ச்சி கருந்தரங்கில் பேசியுள்ளார்.

இதில் நான் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். குடிசைப்பகுதி வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்ந்ந்து வந்தோம்.

எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, நான். 3 சகோதரர்கள் என 6 பேர். நான் தான் இளையவள். தெலுங்கு பேசுவோம்.

எனக்கு 8 வயது இருக்குபோது என் அப்பா இறந்து போனார். அம்மா எல்.ஐ.சி முகவராக பணியாற்றி எங்களை வளர்த்தார்.

12 வயது இருக்கும் போது என் மூத்த அண்ணன் காதல் பிரச்சனையால் இறந்து போனார். அண்ணனின் இறப்பு தற்கொலையா, கொலையா என எங்களுக்கு தெரியாது.

பின் என் இன்னொரு அண்ணன் சாலை விபரத்தில் மரணமடைந்தார். அப்போது தான் அண்ணன் சம்பாதிக்க தொடங்கினார். குடும்பத்தின் சுமையை தாங்கி பிடிக்க மகன் இருக்கிறான் என அம்மா மகிழ்ந்த நேரத்தில் அண்ணனும் இறந்து போனார்.

பின் நான் வேலைக்கு சென்றேன். டிவி சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். முதலில் சம்பளம் குறைவு. பின் ஒரு நாளைக்கு ரூ 1500 சம்பளம். மாதத்தில் 6 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் இருக்கும்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பெற்ற வெற்றியை கொண்டு சினிமா வாய்ப்புகள் தேடினேன்.

உங்களுக்கு கதாநாயகிக்கான முகம் கிடையாது. சின்ன வேடங்களில் நடியுங்கள், டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள் என இயக்குனர்கள் என் முகத்திற்கு நேராக கூறினார்கள்.

தமிழ் பேசியதால் வாய்ப்புகளும் வழங்க மறுத்துவிட்டார்கள். இப்படிதான் சினிமாவின் நடக்கிறது.

2,3 வருடங்களுக்கு பின் அட்டக்கத்தி படத்தில் நடித்தேன், பின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி படங்களில் நடிக்க காக்கா முட்டை படம் வாழ்க்கையை மாற்றியது. வடசென்னை, தர்மதுரை படங்களில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனக்கு யாரும் வாய்ப்பளிப்பதில்லை. என் திறமையை மட்டுமே நம்புகிறேன். நானே எனக்கு ஆதரவு என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!