அவருக்கு பிறகு விஜய் தான்! இவர் தான் மாஸ்டர் – பாராட்டிய பிரபல நடிகர்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவேண்டும், முதல் நாள் முதல் காட்சியை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 9 ம் தேதியே வெளியாக வேண்டிய படம் கொரோனாவால் தள்ளிப்போய்விட்டது.

கொரோனா முடிந்து படம் எப்படியும் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்க உடன் சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு என பலர் நடித்துள்ளார்கள்.

இதில் சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத் ஆகியோர் விஜய்யின் நண்பர்கள். மெர்சல் பட விழாவில் சஞ்சீவ் மேடையில் மீனவன் சமுதாயத்தில் எம்.ஜி.ஆருக்கு பிறகு மக்களால் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் தளபதி விஜய் என கூறினார்.

இதை ரசிகர் ஒருவர் மறுபடியும் நினைவு கூர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது சஞ்சீவ் விஜய் தான் மாஸ்டர் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!