விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை, புகைப்படத்துடன் வெளிவந்த விளக்கம்

சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் திரையலகில் அறிமுகமானவர் ‘ஸ்வாதி ரெட்டி’.

ஸ்வாதிக்கும், அவரின் கணவர் விகாஸ் வாசுவுக்கும் இடையே பிரச்சனை என்று சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்தது. ஸ்வாதி தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நீக்கிவிட்டார் என ரசிகர்கள் நினைத்து, ஸ்வாதிக்கும் அவரது கணவர் விகாஸ் வாசுவுக்கும் இடையே விவாகரத்து ஆகிவிட்டது என பேச துவங்கிவிட்டனர்.

இதை பார்த்த ஸ்வாதி வீடியோ ஒன்றை வெளியிட்டு தேவையில்லாத பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆம் அதில் தனது கணவருடன் எந்த ஒரு பிரச்சனை இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை ஸ்வாதி. தன் திருமண வாழ்க்கையின் நினைவுகளை தனியாக வைக்க தான், அந்த புகைப்படங்களை நீக்கியதாகவும், ‘Archives’ Folder-ல் அவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதை போன்ற வதந்திகளை இணையத்தில் பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!