மாஸ்டர் ட்ரைலர் இப்படித்தான் வரும், பிரபலம் ஓபன் டாக்

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்துள்ளது வர்த்தக ரீதியில். இதனால் மாஸ்டரும் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் தற்போது பல படங்கள் ரிலிஸ் தள்ளிச்சென்றது. இதில் மாஸ்டரும் மாட்டிக்கொண்டுள்ளது.

ஆனால் மாஸ்டர் எப்போதும் வந்தாலும் கண்டிப்பாக வசூல் வேட்டை தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் பணிபுரிந்துள்ள ரத்னகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் மாஸ்டர் ட்ரைலர் வந்தால் கண்டிப்பாக அதில் ரிலிஸ் தேதியும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தற்போதைக்கு ட்ரைலர் இல்லை என்பதை தான் அவர் அப்படி கூறியுள்ளார் என தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!