தளபதி விஜய் என்ன பார்த்து தான் காப்பி அடித்தார்! பிக் பாஸ் நடிகை வெளியிட்ட அதிர்ச்சி பதிவு

விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர்.

இப்படத்தில் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், ஸ்ரீமன், ஸ்ரீநாத் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்து கொண்டிருந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறந்த முறையில் நடைபெற்றது.

இதில் தளபதி விஜய் பேசியதையும், பேசுவதற்கு முன்பு நடனமாடி அனைவரையும் ஆச்சிரிய படுத்தியதையும் நம்மால் எளிதழாவில் மறந்து விட முடியாது.

இந்நிலையில் இப்படத்தில் இருந்து வெளிவந்த First லுக், second லுக், third லுக் அணைத்தும் ரசிகர்களிடையே மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து வெளிவந்த second லுக் போஸ்டரில் விஜய் கொடுக்கும் போஸ் என்ன பார்த்து தான் காப்பி அடித்துவிட்டார் என்று பிக் பாஸ் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

அது வேற யாரும் இல்லை பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட மீரா மிதுன் தான்.

இவர் தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ‘யார் யாரை காப்பி அடித்துள்ளார், இது நான் 2019ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம்’ என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட தளபதி விஜய்யின் ரசிகர்கள் நடிகை மீரா மிதுனை கமெண்டில் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!