சூர்யா 41 குறித்து வெளிவந்த லேட்டஸ்ட் தகவல், இது தான் கூட்டணியா?

நடிகர் சூர்யா தற்போது தனது சூரரை போற்று படத்தின் ரிலீசுக்காக காத்து கொண்டு இருக்கிறார்.

சமீபகாலமாக இப்படத்தின் பல அப்டேட்டுகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இதனாலேயே இப்படத்தின் மீதான மிக பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது என்று கூட கூறலாம்.

இப்படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்திருந்தது.

இதன்பின் தனது கூட்டணியை வெற்றி இயக்குனர் திரு வெற்றிமாறனுடன் வாடி வாசல் எனும் படத்தில் இணைந்து கொண்டுள்ளார் சூர்யா.

இந்நிலையில் தற்போது இப்படங்களுக்கு பிறகு சூர்யா டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது. இவர் கூட்டத்தில் ஒருத்தன் எனும் படத்தை இயக்கி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான Sean Roldan என்பவர் இசையமைக்க போவதாக தற்போது தகவல்கள் தெரியவந்துள்ளது.

ஆனால், இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!