2017-ல் வெளியான படங்களில் ஹிட் படங்கள்..!! எந்த படங்கள் தெரியுமா..?


தமிழ் இந்திய சினிமாவில் வருடத்திற்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 5% அதாவது ஐம்பது முதல் அறுபது படங்கள் வரை ரிலீசாகமால் பெட்டியிலேயே தூங்குகின்றன. அதையும் மீறி திரைக்கு வரும் படங்களில் 90% படங்கள் எப்போது ரிலீசாகியது என்றே தெரியாமல் மின்னி மறைந்துவிடுகின்றன.பொதுவாக இந்தவகை படங்கள் லாபமும் இல்லை, பெரிதாக நட்டமும் இல்லை என தயாரிப்பாளரை கரை சேர்த்து விடுகின்றன.

ஆனால், மீதமுள்ள 5% முதல் 10% வரையிலான படங்கள் படுதோல்வியடைந்து தயாரிப்பாளரை பெரும் துயரத்தில் இழுத்துவிட்டு சென்றுவிடும் அது சிறிய நடிகரின் படம், பெரிய நடிகரின் படம் என்ற விதிவிலக்கெல்லாம் கிடையாது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த காலகட்டத்தில் ஒரு படம் வெற்றி பெறுவது என்பது குதிரை கொம்புதான், படம் வெளியான மூன்று மணிநேரத்தில் இணையதளங்களில் விமர்சனம் மற்றும் திருட்டு வீடியோ இணையதளங்களின் அக்கப்போர் என சினிமா தட்டு தடுமாறி கைத்தடி ஊன்றி மெல்ல மெல்ல பயணித்துகொண்டுதான் இருக்கிறது.


அந்த வகையில், இந்த வரும் டிசம்பர் வரை தமிழில் மட்டும் சுமார் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியானது அதில் விமர்சனம் மற்றும் லாபவசூல் சதவிகித அடிப்படை என இரண்டிலும் வெற்றி பெற்ற படங்களைத்தான் நாம் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதே கண்கள்
எமன்
குற்றம் 23
மாநகரம்
கவண்
பா பாண்டி
பாகுபலி-2
மரகத நாணயம்
மீசை முறுக்கு
விக்ரம் வேதா
தரமணி
துப்பறிவாளன்
ஹரஹர மகாதேவகி
கருப்பன்
மெர்சல்
மேயாதமான்
அவள்
அறம்
தீரன் அதிகாரம் ஒன்று.
மேலும், இந்த வருட இறுதிக்குள் குறைந்தது 20 முதல் 25 படங்கள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!