தளபதியுடன் எந்த வேடத்திலும் நடிக்க தயார்..!! மனம் திறந்த பிரபல நடிகர்..!!


விஜய் சொன்னால்போதும் அந்த வேடத்திலும் நடிக்க தயார்..! பிரபல நடிகரின் ஆசை…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் நடிக்க பல நடிகர், நடிகைகள் ஆசைப்படுகின்றனர். அப்படி விஜய்யுடன் அவரது படத்தில் நடிக்க ஆசைப்படுபவர் சத்யராஜ் மகன் சிபிராஜ்.

இவரது நடிப்பில் நாளை சத்யா திரைப்படம் தமிழகம் முழுக்க திரைக்கு வர இருக்கிறது. இப்படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட சிபிராஜிடம் விஜய் குறித்து கேட்கப்பட்டது.


அப்போது அவர், விஜய் படத்தில் என்னை நடிக்க கேட்டால் ஒப்பு கொள்வேன். வில்லன் வேடத்தில் கூட நடிப்பேன் நடிப்பேன். நமக்கு என ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும், ஆனால் இளைய தளபதி விஜய் என்று வரும்போது அப்படி இல்லை.

அதோடு என்னுடைய வேடமும் முக்கியம் இருக்க வேண்டும். அவருடன் இணையாக நடிக்கும் படி இல்லை என்றாலும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!