கெட்ட வார்த்தையில் திட்டிய நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை…!!!


தமிழ் சினிமாவில் அபியும் நானும் மற்றும் உன்னை போல் ஒருவன் படத்தில் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் . இந்நிலையில் இவருக்கு நிஷா என்ற நடிகையுடன் 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

சமீபத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவியுடன் 2 வது திருமண நாள் கொண்டாட பிரான்ஸ்க்கு சென்றிருந்தனர்.


அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை நிஷா தன்னுடைய டுவிட்டர் பக்கதில் பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்தவர்கள் அவரை பல பெயர்களில் வருணித்து கமெண்ட் செய்திருந்தனர். இதனையடுத்து ஒருவர் இவர் படத்தை பார்த்து தே…மு என்ற கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதற்கு நிஷா நான் உங்கள் அம்மா பெயரை கேட்கவில்லை என அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். கமெண்டை நீக்குவதற்கு பதில் திருப்பி கொடுக்க விரும்புகிறேன் என நிஷா தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!