மாஸ்டர் நஷ்டத்தை விஜய் ஏற்றுக்கொள்வாரா? பிரபலம் வெளியிட்ட தகவல்

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து மிக பெரிய எதிர்பார்ப்பில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது பல விதமான சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்கிய பிரமுகர் ஒரு டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ளது “மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் மாஸ்டர் படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு எதாவது நஷ்டம் ஏற்பட்டால், அதனை தளபதி விஜய் ஏற்றுக்கொள்ளுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!