அஜித் 61 திரைப்படம் உலக மக்கள் சந்திக்கும் பிரச்சனையை தான் பேசும்! வெளியான புதிய தகவல்..

அஜித் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் அனைவராலும் பெரியளவில் எதிர்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இணைந்துள்ள இந்த கூட்டணியின் வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இதனிடையே வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் அவரின் 61 வது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது இப்படம் குறித்த தகவல் ஒன்று காலையில் இருந்து பரவி வருகிறது. அதன்படி “அஜித்தின் அடுத்த படம், உலக அளவில் மக்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளைப் பேசும் படமாக இருக்கும்.

இப்படம் ‘வலிமை’ படத்தைப் போன்று அல்லாமல், ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவும், வசனங்கள் அதிகமாகவும் இருக்கும்” என இயக்குனர் எச்.வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!