பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா காலமானார்

பழம்பெரும் நடிகர் டி.எஸ்.ராகவேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் டி.எஸ்.ராகவேந்திரா. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். பின்னர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான வைதேகி காத்திருந்தாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் ரேவதியின் தந்தையாக நடித்திருந்தார்.

தந்துவிட்டேன் என்னை, சிந்து பைரவி, விக்ரம், சொல்லத்துடிக்குது மனசு, கற்பூர முல்லை, இளையவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1980-இல் வெளிவந்த ‘யாக சாலை’ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!