விஜய்யின் மாஸ்டர் பட நடிகரிடம் அப்டேட் கேட்ட மற்றொரு நடிகர்- என்ன அப்டேட் வந்தது தெரியுமா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். படத்திற்கான படப்பிடிப்பு முதலில் டெல்லியில் ஆரம்பித்து பின் கர்நாடகாவில் நடந்தது.

இப்போது படக்குழு சென்னையில் தான் உள்ளனர், இங்கு பிரபல ஸ்டூடியோவில் பெரிய செட்டில் படப்பிடிப்பு நடக்கிறது.

படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஷாந்தனு நடித்து வருகிறார், இவர் அண்மையில் பட்டாஸ் படத்தை பாராட்டி ட்விட் போட்டார். நடிகை சினேகாவின் நடிப்பையும் புகழ்ந்து தள்ளி பிரசன்னாவை டேக் செய்தார்.

உடனே பிரசன்னா பாராட்டியதற்கு நன்றி கூறிவிட்டு மாஸ்டர் அப்டேட் சொல்லுடா என டுவிட் போட்டுள்ளார். ஆனால் இன்னும் அதற்கு ஷாந்தனுவிடம் இருந்து பதில் வரவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!