மாதவனுக்கு ஜோடியாகும் முக்கிய பட நடிகை! பிரபல நடிகரின் ரீமேக்

நடிகர் மாதவனை நாம் கடைசியாக புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் விக்ரம் வேதா படத்தின் மிரட்டலான வேடத்தில் நடித்திருந்ததை பார்த்தோம்.

இப்படத்தின் விஜய் சேதுபதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மும்பையிலிருக்கும் மாதவன் அடுத்த மாரா என்ற படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார். இப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வந்த சார்லி படத்தின் ரீமேக் ஆகும்.

கல்கி என்ற குறும்படத்தை இயக்கிய திலிப் குமார் மாரா படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீ நாத் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் நெடுஞ்சாலை, அதே கண்கள் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை சிவதா இணைந்துள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!