மாஸ்டர் படத்தில் விஜய்க்கு புதிய கெட்-அப்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் புதிய கெட்-அப்பில் தோன்ற இருக்கிறார்.

விஜய் நடிக்கும் `மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்து வருகிறார். இவர், ‘மாநகரம்,’ ‘கைதி’ ஆகிய 2 படங்களை இயக்கியவர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. விஜய் மீசை இல்லாமல் நடிக்கும் முதல் படமும் இதுவே.

விஜய்-மாளவிகா மோகனன் ஜோடியுடன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். சாந்தனு, அழகம் பெருமாள் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கர்நாடக மாநிலம் சிமோகாவில் ஜெயில் அரங்கு அமைத்து, அதில் படப்பிடிப்பு நடந்தது.

விஜய் மீசையில்லாமல் நடித்த ஜெயில் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து, சென்னையை அடுத்த பனையூரில், பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. அதில் நேற்று முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!