மாநகரம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதியா! வெளியான சூப்பர் தகவல் இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநகரம், இப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாநகரம் திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அப்படத்தை சந்தோஷ் சிவன் இயங்குவதாகவும் அறிவித்து இருந்தனர்.

இதனிடையே ஹிந்தி ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது, அந்த கதாபாத்திரத்திற்கு அவரே டப்பிங் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!