அஜித்துக்கு வில்லனாகும் தனுஷ், கார்த்தி பட நடிகர்?

அஜித்தின் வலிமை படத்தில் பாவெல் நவகீதன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

படத்தில் அஜித், அனிகா இருப்பது தான் உறுதியாக தெரியும். ஆனால் வில்லன் யார், ஹீரோயின் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் கார்த்தியின் மெட்ராஸ், தனுஷின் வட சென்னை படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவரும், வி1 மர்டர் கேஸ் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவருமான பாவெல் நவகீதன் வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாவெல் தான் அஜித்தின் வில்லன் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை இயக்குநரோ அல்லது தயாரிப்பாளர் போனி கபூரோ உறுதி செய்யவில்லை. அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை தான் போனி கபூர் உறுதி செய்தார்.

விஸ்வாசம் பட அப்டேட் கேட்டு கெஞ்சிய அஜித் ரசிகர்கள் தற்போது வலிமை அப்டேட் எதுவும் கிடைக்காதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது என்னவோ, இந்த தல நடிக்கும் படத்தை இயக்குபவர்கள் எல்லாம் அப்டேட் கொடுக்கும் விஷயத்தில் மிகவும் கஞ்சத்தனமாக உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!