தமிழ் சினிமா 2019, உச்சம் தொட்ட வசூல் சாதனைகளும், தோல்வியால் ஏற்பட்ட சோதனைகளும்- ஒரு சிறப்பு பார்வை

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் ஒரு பொற்காலம் என்றே கூறலாம், சுமார் ரூ 1300 கோடிகளை தமிழ் சினிமா இந்த வருடம் உலகம் முழுவதும் அறுவடை செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 800 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்றால் ஆச்சரியமில்லை.

ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் என்றால் படங்கள் வரிசைக்கட்டி நிற்கும், ஆனால், கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்கள் படம் என்றால் ஏதாவது ஒன்று தான் வந்து சென்றது, இதனால், ஒரு படத்தை மட்டுமே ரசிகர்களுக்கு பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால், இதை இந்த வருடம் ஆரம்பத்திலேயே வெளிவந்த விஸ்வாசம், பேட்ட அதை முறியடித்து தமிழகத்தில் மட்டுமே இப்படங்கள் சுமார் ரூ 250 கோடிகள் வரை வசூல் செய்து புதிய சாதனையை படைத்தது.

இதற்கு முன் எந்த ஒரு பண்டிகையிலும் இத்தனை கோடிகள் தமிழக பாக்ஸ் ஆபிஸில் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, இதை தொடர்ந்து தமிழ் சினிமா வேற லெவலுக்கு செல்லும் என்று பார்த்தால், அதை தொடர்ந்து பெரும் வீழ்ச்சி தான். பேரன்பு, சர்வம் தாளமயம், வந்தா ராஜவா தான் வருவேன் ஆகிய படங்கள் தோல்வியை சந்திக்க, தில்லுக்கு துட்டு-2 கொஞ்சம் ஆறுதல் வெற்றியை தந்தது.

இதை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியின் எல் கே ஜி சூப்பர் ஹிட் அடித்தது, அதன் பிறகு அருண் விஜய்யின் தடம் படம் அவருடைய திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது.

பிறகு சூப்பர் டீலக்ஸ் ஏ செண்டர் ஆடியன்ஸிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற, அதை தொடர்ந்து வந்த நட்பே துணை இளைஞர்களிடம் குறிப்பாக 2கே கிட்ஸிடம் வேற லெவல் வரவேற்பு, இதற்கு இப்படத்தின் இடம்பெற்ற பாடல்கள் பெரிய பலமாக அமைந்தது.

பிறகு லாரன்ஸின் மினிமம் கேரண்டி காஞ்சனா 3 களத்தில் இறங்க, மிக மோசமான விமர்சனங்களை தான் பெற்றது, ஆனால், இந்த விமர்சனம் எல்லாம் பேமிலி ஆடியன்ஸ் முன்பு ஒன்றுமில்லை என்று பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது காஞ்சனா-3.

இதன் பிறகு 100, மான்ஸடர் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் டீசண்ட்-ஆக போக, பெரிதும் எதிர்ப்பார்ப்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படுதோல்வியை சந்தித்தது, அது மட்டுமின்றி விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

அதே போல் லிசா, நீயா2, தேவி 2 என பேய் படங்களும் வரிசையாக தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இப்படி காமெடி மற்றும் பேய் படங்கள் சீசனும் மக்களுக்கு புலித்து போனது நன்றாக தெரிந்தது.

பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த செல்வராகவன், சூர்யா கூட்டணியில் என் ஜி கே எதிர்ப்பார்த்த விமர்சனம் மற்றும் வசூலும் வரவில்லை என்பது பெரும் சோகத்தை சூர்யா ரசிகர்களிடம் கொடுத்தது.

இந்த நேரத்தில் கொலைக்காரன், கேம் ஓவர், இருட்டு போன்ற த்ரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வரிசையில் ரசிகர்களிடம் கவனம் பெற்ற படமாக ஹவுஸ் ஓனர், ஜீவி, ராட்சஸி, ஆகிய படங்கள் இருந்தது, ஜீவாவிற்கு இந்த வருடமும் போதாத காலம் தான் கொரீல்லா படு தோல்வியடை, யோகி பாபு நடிப்பில் வெளிவந்த தர்மபிரபு, கூர்கா படங்கள் கொஞ்சம் ஓப்பனிங் நன்றாக இருந்ததையும் மறுக்க முடியாது.

பெரும் எதிர்ப்பார்ப்பில் வந்த விக்ரமின் கடாரம் கொண்டான், போட்ட பணத்திற்கு பாதகம் இல்லை ரகம், அதே நேரத்தில் சந்தானத்தின் ஏ1 பாக்ஸ் ஆபிஸை கலக்கி எடுத்து அவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முயற்சியாக வந்த ஆடை ஒரு சில காரணங்களால் தாமதமாக வந்தது படத்தின் ஓப்பனிங் வசூலை பாதிக்க ,படமும் தோல்வியை தான் தந்தது.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிய காலமாக கருதலாம், அதை தொடர்ந்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை, கோமாளி, நம்ம வீட்டு பிள்ளை, அசுரன் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ப்ட்டையை கிளப்பீயது. வழக்கம் போல் சூர்யாவிற்கு காப்பான் சோதனையில் தான் முடிந்தது.

பிறகு தீபாவளி பேட்ட, விஸ்வாசம் போல் பிகில், கைதி வர, எல்லோரும் பிகில் பக்கத்தில் கைதி நிற்காது என கூற, அனைத்தையும் முறியடித்து கைதியும் தன் பங்கிற்கு ரூ 100 கோடி வசூலை கொடுத்து ஆச்சரியப்படுத்தியது.

பிகில் குறித்து பேச வேண்டுமென்றால் தனி கட்டுரையே எழுத வேண்டும், மிக மோசமான விமர்சனத்தை சந்தித்து, தமிழ் சினிமாவிலேயே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படமாக பிகில் அமைந்தது, விஜய்யின் மாஸ் மற்றும் மார்க்கெட் மட்டுமே காரணம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

பிகில் மூலம் விஜய்யின் மார்க்கெட் பல மடங்கு அனைத்து ஏரியாக்களிலும் உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் இதை தொடர்ந்து வந்த அனைத்து படங்களும் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வந்த எனை நோக்கி பாயும் தோட்டாவும் படுதோல்வியை தான் தந்தது. சரி இந்த வருடம் படங்கள் மற்றும் நடிகர்களின் நிலை என்ன என்பதை பார்ப்போம்.

உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்(அதிகாரப்பூர்வம் இல்லை)

பிகில்- ரூ 300 கோடி
பேட்ட- ரூ 220 கோடி
விஸ்வாசம்- ரூ 183 கோடி(சில பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் ரூ 200 கோடி என்றும் கூறி வருகின்றனர்)
காஞ்சனா3- ரூ 125 கோடி
கைதி- ரூ 106 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 105 கோடி
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 75 கோடி
காப்பான் – ரூ 71 கோடி
அசுரன் – ரூ 68 கோடி

தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்(அதிகாரப்பூர்வம் இல்லை)
பிகில்- ரூ 143 கோடி
விஸ்வாசம்- ரூ 140 கோடி
பேட்ட- ரூ 115 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 72 கோடி
காஞ்சனா3- ரூ 70 கோடி
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 60 கோடி
கைதி- ரூ 55 கோடி
அசுரன்- ரூ 55 கோடி
கோமாளி- ரூ 45 கோடி
காப்பான் – ரூ 42 கோடி

ன்னையில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்
ட்ட- ரூ 16 கோடி
பிகில்- ரூ 14 கோடி
விஸ்வாசம்- ரூ 13.3 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ 10.4 கோடி
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்- ரூ 10 கோடி
காஞ்சனா3- ரூ 7.5 கோடி
அசுரன் – ரூ 6.4 கோடி
நம்ம வீட்டு பிள்ளை- ரூ 5.5 கோடி
கோமாளி- ரூ 5 கோடி
காப்பான் – ரூ 5 கோடி

ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தோல்வியை தழுவிய படங்கள்
வந்தா ராஜாவா தான் வருவேன்
தேவ்
90எம் எல்
ஐரா
என் ஜி கே
அயோக்யா
மிஸ்டர் லோக்கல்
சிந்துபாத்
ஆடை
சங்கத்தமிழன்
ஆதித்ய வர்மா
எனை நோக்கி பாயும் தோட்டா
மகாமுனி

பாக்ஸ் ஆபிஸ் தாண்டி ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்ற படங்கள்
பேரன்பு
சூப்பர் டீலக்ஸ்
வெள்ளை பூக்கள்
ஜீவி
ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7
ராட்சசஸி
குண்டு
காளிதாஸ்

து மட்டுமின்றி யாராலும் பெரிய எதிர்ப்பார்ப்பில் இல்லாமல் வெளிவந்து குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சிவப்பு, மஞ்சள் பச்சை படம் நல்ல ஹிட் அடித்தது.

மேலும், இந்த வருடம் நடிகர்கள் என்று பார்த்தால் வசூல் அடிப்படையில் விஜய் கையே ஓங்கி நிற்கின்றது, ஆனால், பிகில் படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வசூல் செய்திருந்தாலும், தமிழகத்தில் அதிக தொகைக்கு விற்றதால், போட்ட பணத்தை மட்டும் கைப்பற்றி விநியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் இல்லாத படமாக தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் பலருக்கும் பிகில் ஆல் டைம் பெஸ்ட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்து மெகா ஹிட் ஆகியுள்ளது, அஜித்திற்கு இந்த வருடம் பொற்காலம் தான் தான், மாஸாக வந்த விஸ்வாசமும் ஹிட், க்ளாஸாக வந்த நேர்கொண்ட பார்வையும் ஹிட்.

நீண்ட வருடமாக சொல்லி அடித்தது போல் ஒரு வெற்றிக்கு ஏங்கி வந்த சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு பேட்ட நல்ல விருந்தாக அமைந்தது.

சூர்யாவிற்கு இந்த வருடமும் போதாத காலம் தான், விக்ரமிற்கு பெரிய வெற்றி இல்லை, சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கலில் சறுக்கினாலும், நம்ம வீட்டு பிள்ளையில் பிடித்துவிட்டார், தனுஷ் அசுரனில் கை ஓங்கி, எனை நோக்கி பாயும் தோட்டாவில் கை இறங்கிவிட்டார்.

சிம்புவிற்கு படம் வந்த்தா என்றே பல பேருக்கு தெரியாத வருடம் தான் இது, விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸில் கவனம் ஈர்த்தாலும் சங்கத்தமிழன், சிந்துபாத் என தொடர் தோல்விகளால் துவண்டுள்ளார்.

இவர்களை தாண்டி இந்த வருடம் அருண் விஜய், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி கலக்கியது குறிப்பிடத்தக்கது, விக்ரம் மகனின் எண்ட்ரீ பேசப்பட்டாலும் ரிசல்ட் லாபகரமாக இல்லை.

அந்த வகையில் இந்த வருடம் மிகப்பெரும் லாபத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்த படங்கள் என்று பார்த்தால்…

விஸ்வாசம்
எல் கே ஜி
கோமாளி
அசுரன்
நம்ம வீட்டு பிள்ளை
கைதி
தடம்
ஏ1
காஞ்சனா 3
ஆகிய படங்கள் போட்ட பணத்தை விட தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ள படங்கள்.

இந்த வருடம் ஹாலிவுட் படங்களையும் நம்மால் ஒதுக்கிட விட முடியாது, ஹாலிவுட் படங்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரும் மார்க்கெட் உருவாகியுள்ளது, இதற்கு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஒரு படமே மிகப்பெரும் சாட்சி.

சுமார் ரூ 44 கோடி வரை இப்படம் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, அதோடு சென்னை பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ 10 கோடி வசூலை எட்டியுள்ளது.

இது மட்டுமின்றி லயன் கிங், ப்ரோஸன் 2, ஸ்பைடர் மேன், கேப்டர் மார்வல், ஜோக்கர், ஜுமான்ஜி ஆகிய படங்கள் பெரியளவில் இங்கு வசூல் செய்துள்ளது.

வருட கடைசியில் வந்த ஹீரோ, தம்பி ஆகிய படங்களின் நிலை உடனே கணக்கிட முடியாததால், அவை இந்த லிஸ்டில் சேர்க்க முடியவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!