வலிமை படத்தில் இருந்து யுவன் வெளியேறினாரா, இவரா புதிய இசையமைப்பாளர்- ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

அஜித்தின் 60வது படம் வலிமை. படத்தின் பூஜை அன்றே பட பெயரையும் படக்குழு அறிவித்தார்கள்.

அதே வேகத்தில் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வந்தாலும் நாயகி பற்றி இன்னும் தகவல் வரவில்லை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசையமைத்த யுவனே இப்படத்திற்கும் இசை என்றனர். ஆனால் இப்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு தகவல்.

அதாவது சில காரணங்களால் யுவன் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக படத்தில் டி.இமான் கமிட்டாகி இருக்கிறார் என்கின்றனர்.

ஆனால் யுவன் தான் இப்பட இசை, அதற்கான வேலையில் தான் அவர் இருக்கிறார், டி.இமான் என்று வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!