விஜய்யின் தன்மையை பார்த்து வியந்து போன பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்

திரையுலகில் பல நடிகர் நடிகைகள் தளபதி விஜய்யுடன் பணிபுரிந்ததை பற்றியும் அவர் எப்படி பட்டவர் என்பது பற்றியும் கூறி நாம் கேட்டுருப்போம்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், தான் விஜய்யுடன் பணிபுரிந்ததை பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கத்ரீனா கூறியது “நான் விஜய்யுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்துளேன். ஷூட்டிங்கிங் நடுவே நான் என் மொபைல் பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது என் முனை ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரின் கால் மட்டும் தான் எனக்கு தெரிந்தது. அவரின் கால்களை மீண்டும் திரும்ப திரும்ப பார்த்தேன்.

அதன்பின் நிமிர்ந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது அவர் நடிகர் விஜய் என்று. அவர் தமிழ் திரையுலகில் மிக பெரிய நடிகர் அவர் எனக்கு குட்பாய் சொல்லுவதற்கு காத்திருந்தார்” என்று விஜய் அவர்களின் தன்மையை பார்த்து தான் வியந்து போனதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!