தளபதி படத்தில் இம்முறை எந்த “ஆயுதம்” தெரியுமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


மெர்சல் வெற்றியால் உற்சாகமான விஜய் ரசிகர்களை விஜய்-முருகதாஸ் கூட்டணி அறிவிப்பு வெளியாகி அந்த உற்சாகத்தை குறைக்காமல் வைத்துள்ளது.

இரண்டு தொடர் தோல்விகளை முருகதாஸ் கொடுத்திருந்தாலும். விஜயுடன் சேர்ந்து உருவாக்கிய துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்றவை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்நிலையில், தளபதி62 படத்தை நாங்கள் தான் தயாரிக்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று மாலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், படம் குறித்த அறிவிப்பு கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், துப்பாக்கி, கத்தி-யை தொடர்ந்து இந்த முறை எந்த ஆயுதத்தின் பெயரை முருகதாஸ் படத்தின் தலைப்பாக வைக்கப்போகிறார் என்று விஜய் ரசிகர்கள் பயங்கர எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தை தொடங்கிவிட்டு தலைப்பு வெளியிடுவார்களா..? அல்லது தலைப்பை சொல்லிவிட்டு படப்பிடிப்பை தொடங்குவார்களா..? என்ற கேள்வி பொதுவான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!