விஜய்க்கு நன்றி உள்ள நாயா இருப்பேன் – தளபதி 63-ல் நடித்த பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63.

அட்லீ இயக்கி வரும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி செராப் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து பிக் பாஸ் தாடி பாலாஜியும் நடித்துள்ளாராம். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நான் தளபதி விஜயுடன் சேர்ந்து இறுதியாக சச்சின் படத்தில் நடித்திருந்தேன். விஜய் எனக்கு நிறைய உதவிகள் செய்திருந்தார்.

தற்போது தளபதி 63-ல் நடித்திருப்பது மகிழ்ச்சி. இன்னும் டப்பிங் கொடுக்க வேண்டிய வேலை தான் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் நான் என்றென்றைக்கும் விஜய்க்கு நன்றியுள்ள நாயாக இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.