வட்டியும் வரல, அசலும் வரல: சிவகார்த்திகேயனின் ஹீரோவுக்கு இடைக்கால தடை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஹீரோ. இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படம் அறிவித்தபடி திரைக்கு வராது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்தாண்டுடி.ஆர்.எஸ். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜ 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

ஆனால், தற்போது அதற்குரிய வட்டியையும், அசல் பணத்தையும் அவர் திருப்பி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதோடு, படத்தையும், கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு கைமாற்றியுள்ளார். இதன் காரணமாக டிஆர்.எஸ். பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் மூலம், ஹீரோ உள்பட 24 ஏ.எம்.நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று டிஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

டிஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதன் காரணமாக, படம் அறிவித்தபடி வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!