விஸ்வாசம் முதலிடமா? இது ரிசல்ட் இல்லை, டுவிட்டரே அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலங்களை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்களுடைய படங்கள் தான் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும்.

அந்த வகையில் நேற்று விஸ்வாசம் தான் டுவிட்டரில் அதிகம் பயன்படுத்திய வார்த்தை, இது தான் முதலிடம் என கூறி வந்தனர்.

ஆனால், இவை இந்த வருடம் அரையாண்டு வரை தான் கணக்கிடப்பட்டதாம், இன்னும் இந்த வருடம் முடியவில்லை.

அதனால், இது இந்த வருடத்திற்கான ரிசல்ட் இல்லை என டுவிட்டரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதோடு பிகில் தான் இந்த வருடத்தில் முதலிடம் பிடிக்கும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர், பொறுத்திருந்து பார்ப்போம்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!