அக்கா நயன்தாரான்னா மட்டும் ஒஸ்தியா அட்லி?

பிகில் படத்தை பார்த்தவர்கள் இந்த அட்லிக்கு ஓரவஞ்சனையை பாரேன் என்று தெரிவித்துள்ளனர்.

அட்லிஇயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை.

முன்னதாக பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வருவார் என்று நம்பப்பட்டது. படத்தில் நடிப்பதோடு சரி எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா தம்பி அட்லிக்காக தனது கொள்கையை தளர்த்த ஒப்புக் கொண்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.

தம்பியாவது, அண்ணனாவது என்று நயன் பிகில் விழாவுக்கு வரவில்லை. அட்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வராத ஹீரோயின்கள் படத்தில் இறந்துவிடுவார்கள். முன்னதாக இசை வெளியீட்டு விழாக்களுக்கு வராத நித்யா மேனன், சமந்தாவை மெர்சல், தெறி படங்களில் போட்டுத் தள்ளிவிட்டார் அட்லி.

இதையடுத்து பிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா இறப்பது போன்று காட்சி இருக்கும் என்று ரசிகர்கள் முடிவே செய்துவிட்டனர். ஆனால் பிக் பாஸ் போன்று அட்லிக்கு டுவிஸ்ட் வைப்பது பிடிக்கும் போன்று.

பிகில் படத்தில் நயன்தாராவை போட்டுத் தள்ளவில்லை. இதை பார்த்தவர்களோ அது என்ன அட்லிக்கு இப்படி ஓரவஞ்சனை. அக்கான்னா அம்புட்டு ஒஸ்தியாப் போச்சா, எங்க சம்மு, நித்யா மேனன்னா தாக்காளி தொக்கா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!