பாவம் கவின், இப்படி எல்லாம் செய்து அவரை ஏமாத்தாதீங்க

பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்குமே ஒரேயொரு கேள்வி தான் எழுந்தது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் பலரையும் சமூக வலைதளங்களில் மக்கள் விளாசினார்கள், விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

கவின் ஆர்மி என்று குரல் கொடுப்பவர்கள் மீது மற்றவர்கள் ஏகப்பட்ட புகார் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் கவின் ஆதரவாளர்கள் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளனர். ட்விட்டரில் கவின் ஆதரவாளர்களுக்கும், தர்ஷன் ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று வெளியான பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கவினுக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கப்பட்டது. அவர் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கவினை தலையில் தூக்கி வைத்து ஆடாத குறையாக புகழ்ந்தார்கள். பார்வையாளர்கள் என்று பெயரில் அரங்கில் இருந்தவர்கள் கவினுக்கு அளித்த வரவேற்பை டிவியில் பார்த்தவர்கள் இது என்ன தானா சேர்ந்த கூட்டமா இல்லை காசு கொடுத்து வரவழைத்ததா என்று கேள்வி எழுப்பினார்கள்.

கவின் என்னமோ அடக்க, ஒடுக்கமாகத் தான் பேசினார். ஆனால் அவர் பேச்சும் தான் சந்தேகத்தை கிளப்பியது. பிக் பாஸ் வீட்டில் இருந்த கவினிடம் இந்த பவ்யம் எல்லாம் இல்லையே என்கிறார்கள் பார்வையாளர்கள்.

அஜித், விஜய் ரேஞ்சுக்கு கவினுக்கு பில்ட்அப் கொடுத்துள்ளனர். தனுஷ் போன்று வேட்டி, சட்டை கொடுத்து அடக்கி வாசிக்கச் சொல்லி ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கிறார்கள் என்று மக்கள் விமர்சிக்கிறார்கள்.

இந்த பில்ட் அப்பை எல்லாம் நம்பாதீங்க கவின். இது வெறும் மாயை. நிஜத்தில் உழைப்பு மட்டுமே கை கொடுக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகத்திற்கும் பிரபலமான ஓவியாவாலேயே கோலிவுட்டில் பெரிய ஆளாக முடியவில்லை. இதை எல்லாம் மனதில் வைத்து சூதானமாக நடந்து கொள்ளுங்கள் என்று கவின் மீது அக்கறை உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!