விஷாலின் பேட்டியால் அதிர்ச்சியான அரசியல் வாதிகள்..!! எதனால் தெரியுமா..?


சட்டத்திற்கு புறம்பாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுமாறு இயக்குனர் சேரன் விஷாலிடம் தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கையை முன் வைத்து தயாரிப்பாளர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அரசியல்வாதி
மக்கள் பிரதிநிதி

அரசியல்வாதியாக அல்ல மக்கள் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நான் போட்டியிட்டபோது இதே போன்று பிரச்சனை வந்தது. தற்போதும் பிரச்சனை வந்துள்ளது. நான் சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை.

கட்சி
தேர்தல்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

நான் கட்சி துவங்க இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே போட்டியிடுகிறேன். அரசியல்வாதியாக அல்ல மக்களில் ஒருவனாக தேர்தலை சந்திக்க உள்ளேன்.

ஆர்.கே. நகர்
மக்கள்

ஆர்.கே. நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றை நிறைவேற்றுவேன். மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பேன்.

நடிகர் சங்கம்
தயாரிப்பாளர் சங்கம்

நல்லது செய்ய வேண்டும் என்று தான் நடிகர் சங்க தேர்தலில் நின்று ஜெயித்தோம். அதே நோக்கத்தில் தான் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் போட்டியிட்டு வென்றோம். தற்போதும் நல்லது செய்யும் நோக்கத்திலேயே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார் விஷால்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!