3 நாளில் ரூ. 455 கோடி, தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா!: கஸ்தூரி கிண்டல்

தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா! என்று நடிகை கஸ்தூரி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

பண்டிகை காலங்கள் என்றாலே தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை அமோகமாக இருக்கும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ. 455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

எப்பொழுது பண்டிகை வந்தாலும் டாஸ்மாக் விற்பனை விபரங்களை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் படம் கூட மூன்று நாட்களில் ரூ. 100 கோடி தான் வசூலித்தது. ஆனால் டாஸ்மாக்கில் பிகில் ரிலீஸான அதே நாளில் மது விற்பனை ரூ. 100 கோடிக்கு நடந்துள்ளது.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி இது குறித்து ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், *தமிழகம் – அசுர சாதனை!*

டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.������

தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா ! என்று தெரிவித்துள்ளார்.

அதை பார்த்த நெட்டிசன்களோ, நீங்கள் பெரிய நல்லவர் மாதிரி பேச வேண்டாம். பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்துவீர்கள். அதுவே டாஸ்மாக்கில் மது விற்றால் நக்கலடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுவரை மது அருந்தியதே இல்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்றனர்.

நெட்டிசன்களின் கமெண்ட்டுகளை பார்த்த கஸ்தூரியோ, நான் குடிக்க மாட்டேன். மது என்ன, காப்பி டீ குளிர்பானம் போன்ற எதுவும் குடிப்பதில்லை. அசைவம் உண்பதில்லை. எனக்கு எல்லா நாளும் விரதம் தான். #ஊன்_ஒழுக்கம்

நான் குடிப்பதில்லை. என் குடும்பத்தில் குடிக்கும் பழக்கம் யாருக்கும் கிடையாது. மது அரக்கனை ஒழிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!