காதலரை மறக்க முடியாமல் தவிக்கும் நடிகை

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை, தன்னுடைய காதலரை மறக்க முடியாமல் தவித்து வருகிறாராம்.

தமிழில் தளபதியாருடன் ஜோடி போட்ட நடிகை, வெளிநாட்டு பாய்பிரண்டுடன் காதல் கொண்டிருந்தாராம். இருவரும் லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தார்களாம். நன்றாக போய் கொண்டிருந்த இவர்களுடைய காதலில் திடீர் என்று விரிசல் ஏற்பட்டு காதலை முறித்துக் கொண்டு இருவரும் பிரிந்தார்களாம்.

காதல் பிரேக் அப் ஆகி சில மாதங்கள் ஆகியும் சோகத்தில் இருக்கும் நடிகை, பட வாய்ப்புகள் கிடைத்தால் எல்லாம் மறந்து போகும் என்று நினைத்தாராம். ஆனால், எதிர்பார்த்த படி எந்த பட வாய்ப்பும் வரவில்லையாம். இதனால் காதலரை மறக்க முடியாமல் தவித்து வருகிறாராம் நடிகை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!