ட்வீட் போட்ட ஹெச். ராஜா: பார்த்து பண்ணச் சொல்லும் விஜய் ரசிகர்கள்

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போட்ட ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது இளைய மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு ரஜினிகாந்தை அவரின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று நேரில் அழைத்துள்ளார். அந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை ராஜா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ராஜாவின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

என்ன சார் ஜோசப் விஜய்யை அழைக்க மாட்டீர்களா?. தீபாவளிக்கு பிகில் படம் ரிலீஸாகியுள்ளது. கொஞ்சம் பார்த்து இலவச விளம்பரம் பண்ணுங்க. ஹெச். ராஜாவுக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பற்றி கவலை இல்லை. காரணம் அந்த குழந்தையின் பெயர் சுஜித் வில்சன் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தை விளாசி ட்வீட் செய்தார் ஹெச். ராஜா. அவர் படத்திற்கு கண்டனம் தெரிவித்ததால் பெரிய அளவில் இலவச விளம்பரம் கிடைத்தது. இதையடுத்து படத்தை வெளியிட்ட சில இயக்குநர்களோ, ராஜா சார் மனசு வச்சா நல்லா இருக்கும் என்று தெரிவித்தனர்.

அரசை விமர்சித்தால் படத்திற்கு கண்டமேனிக்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதே மெர்சல் படம் மூலம் தான் பலருக்கும் தெரிய வந்தது. ஹெச். ராஜா விஜய்யை ஜோசப் விஜய் என்று பேசினார்.

பிகில் படத்தில் இலவச விளம்பரம் கிடைக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளன. ஆனாலும் விளம்பரம் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் விஜய் ரசிகர்கள் ஹெச். ராஜாவிடம் உதவி கேட்டுள்ளனர்.

பிகில் படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!