நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே: சுஜித் குறித்து விவேக் ட்வீட்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் குறித்து விவேக் ட்வீட் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் பிரிட்டோ-கலாமேரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு வயதில் சஞ்சித என்று ஒரு மகன் உள்ளான்.

அந்த சிறுவன் நேற்று தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பார விதமாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 17 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சிறுவன் சுஜித் கிணற்றில் விழுந்த போது சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த நிலையில், மீட்பு பணி போது 70 அடி ஆழம் சென்றுள்ளதால் சம்பவ இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சிறுவன் சுர்ஜித்துக்காக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தொடர்ந்து பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் #SaveSujith என்ற ஹேஷ் டேக் மூலம் ட்வீட் செய்து குழந்தையை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சுஜித் மீண்டு வரவேண்டும். நம்மால் முடிந்தது கண்ணீர் மல்கும் பிரார்த்தனைகள் மட்டுமே. அஜாக்கிரதை அலட்சியம் இவை இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன. இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்க கடும் தண்டனையே தீர்வு’என்று பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!